7 கிளை கொண்ட அதிசய பனைமரத்தில் 9 கண் நுங்கு…!

Read Time:1 Minute, 33 Second

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நுங்கு சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பனை தொழிலாளர்கள் அதிகம் வசித்து வரும் மாவட்டமாகும்.

அங்கு லட்சக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. கீழக்கரை அதன் சுற்றுவட்டார பகுதியில் வருடந்தோறும் நுங்கு, பதநீர் போன்ற இயற்கையான குளிர்ச்சியூட்டும் பானங்கள் அதிகஅளவில் விற்பனை செய்யப்படுகிறது.

கீழக்கரை அருகே 7 கிளைகளுடன் அதிசய பனைமரம் உள்ளது. அந்த மரத்தில் 9 கண்களுடன் நுங்கு இருந்துள்ளது.

பெரும்பாலும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு 3 அல்லது 4 கண்கள் மட்டுமே இருக்கும். நேற்று வேளானூர் பகுதியில் உள்ள பனை மரத்தில் நுங்கு சீவிய போது ஒரு நுங்கில் மட்டும் 9 கண்கள் நுங்கு இருந்தன.

இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் அந்த நுங்கையும் அந்த மரத்தை ஆறு பனை சாமிபோல் எண்ணி 7 பனை கிளை கொண்ட அம்மரத்தை அதிசயத்துடன் கண்டுகளித்தனர்.

இதுபோன்ற மரங்கள் ஆயிரத்தில் ஒன்று மட்டுமே வளரும் என்றும் 9 கண்கொண்ட நுங்கு இந்த பகுதியில் முதல் முறையாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.