‘கோவேக்சின்’ 18 மாநிலங்களில் நேரடி வினியோகம் – பாரத் பயோடெக்

Read Time:55 Second

‘கோவேக்சின்’ கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்பட 18 மாநிலங்களுக்கு கடந்த 1-ந் தேதியில் இருந்து ‘கோவேக்சின்’ தடுப்பூசிகளை நேரடியாக வினியோகித்து வருகிறோம். தொடர்ந்து நேரடியாக வினியோகிப்போம் நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளது.

இந்த நிறுவனம் சமீபத்தில், மாநிலங்களுக்கான ‘கோவேக்சின்’ விலை ரூ.600-ல் இருந்து ரூ.400 ஆக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.