பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

Read Time:3 Minute, 23 Second

கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் வர, பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா கூறினார்.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது, நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களை தினமும் பாதித்து வருகிறது. தினமும் 4 ஆயிரத்துக்கு அதிகமானோர் கொரோனாவுக்கு உயிரிழக்கின்றனர்.

8 வாரங்கள் ஊரடங்கு

கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வர பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அடுத்த 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு நீடிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா கூறியுள்ளார்.

6-8 வாரங்களில் பாதிப்பு குறையாது…

மேலும் பாதிப்பு 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்துக்கு குறைந்தால் தான் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அகற்றி திறக்க முடியும். ஆனால் 6-8 வாரங்களில் இதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்பது தெளிவு.

டெல்லியில் பாதிப்பு விகிதம் 35 சதவீதம் அளவுக்குப்போய் இப்போது 17 சதவீத அளவுக்கு வந்திருக்கிறது. ஆனால் நாளையே டெல்லியில் ஊரடங்கை விலக்கினால், அது பேரழிவை ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

அரசுக்கு பரிந்துரை…

கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி நடந்த கொரோனா தொடர்பான தேசிய பணிக்குழு கூட்டத்தில் 10 சதவீதமோ அதற்கு மேலாகவோ பாதிப்பு விகிதம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் அது நடைபெறவில்லை, மத்திய அரசு பொருளாதார தாக்கத்தின் காரணமாக நாடு தழுவிய பொது முடக்கத்தில் இருந்து விலகி, அதை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்கு விட்டுள்ளது. அந்த பரிந்துரையை ஏற்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது அதிருப்தியை தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

நான்கில் மூன்று பங்கு மாவட்டங்கள்

தற்போது நாட்டில் உள்ள 718 மாவட்டங்களில் நான்கில் மூன்று பங்கு மாவட்டங்களில் அதாவது 533 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் என்பது 10 சதவீதத்துக்கும் மேலாக இருக்கிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களும் இவற்றில் அடங்கும்.

இந்த மாவட்டங்களில் அடுத்த 8 வாரங்கள் வரையில் ஊரடங்கு தொடர வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா கூறி இருப்பது, நாட்டின் பெரும்பகுதிகளை உள்ளடக்கிய ஊரடங்கு.