‘ஆவின்’ பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்தது..! இன்று அமலானது

Read Time:2 Minute, 45 Second

முதல்- அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், முதலில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ‘ஆவின்’ பால் விலை குறைக்கப்படும் அறிவிப்பும் ஒன்றாகும். இதையடுத்து கடந்த 8-ந் தேதி ‘ஆவின்’ பால் விலை குறைக்கப்படுவது தொடர்பான முழு விவரத்தையும் தமிழக அரசு வெளியிட்டதுடன், இந்த திட்டம் 16-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தது.

புதிய விலை நிலவரம்

அதன்படி ‘ஆவின்’ பால் விலை குறைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வந்தது. குறைக்கப்பட்ட ‘ஆவின்’ பால் விலை குறித்த முழு விவரம் வருமாறு:-

  • 1 லிட்டர் ஆவின் நீல நிற ‘நைஸ்’ பாக்கெட் ரூ.3 விலை குறைந்து, ரூ.40-க்கு விற்பனை ஆகிறது. ½ லிட்டர் பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.20-க்கு விற்பனை ஆகிறது.
  • ½ லிட்டர் ஆவின் பச்சை நிற ‘மேஜிக்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.22-க்கு விற்பனை ஆகிறது.
  • ½ லிட்டர் ஆவின் ஆரஞ்சு நிற ‘பிரீமியம்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.24-க்கு விற்பனை ஆகிறது.
  • ½ லிட்டர் ஆவின் ரோஸ் நிற ‘டயட்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.18.50-க்கு விற்பனை ஆகிறது.
  • 1 லிட்டர் ஆவின் டீமேட் பாக்கெட் ரூ.3 விலை குறைந்து, ரூ.57-க்கு விற்பனை ஆகிறது.

‘ஆவின்’ மாதாந்திர பால் அட்டை புதிய விலை விவரம் வருமாறு:-

  • 1 லிட்டர் நீல நிற ‘நைஸ்’ பாக்கெட் ரூ.3 விலை குறைந்து, ரூ.37-க்கு விற்பனை ஆகிறது. ½ லிட்டர் பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.18.50-க்கு விற்பனை ஆகிறது.
  • ½ லிட்டர் பச்சை நிற ‘மேஜிக்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.21-க்கு விற்பனை ஆகிறது.
  • ½ லிட்டர் ஆரஞ்சு நிற ‘பிரீமியம்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.23-க்கு விற்பனை ஆகிறது.
  • ½ லிட்டர் ரோஸ் நிற ‘டயட்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.18-க்கு விற்பனை ஆகிறது.

நுகர்வோருக்கு இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள பால் அட்டைகளுக்கு உண்டான வித்தியாச தொகை, அடுத்த மாதம் பால் அட்டையில் ஈடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.