இந்தியாவை மிரட்டும் கருப்பு பூஞ்சை பெருந்தொற்று.. மத்திய அரசின் அறிவுரைகள்..

Read Time:3 Minute, 40 Second

இந்தியாவில் கொரோனா 2-வது அலை கோரத்தாண்டம் ஆடுகிறது.

இதற்கிடையே மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று மிரட்டுகிறது.

வடமாநிலங்களில் காணப்பட்ட இந்த தொற்று தற்பொது தென் மாநிலங்களில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தலைக்காட்டி பீதியடைய செய்திருக்கிறது.

இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வெகுவாக பாதித்து வரும் இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் சுகாதாரத்துறை கலக்கத்தில் உள்ளது. இந்நிலையில், கருப்பு பூஞ்சை தொற்று குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் லவ் அகர்வால் எழுதியுள்ள கடிதத்தில் பல்வேறு அறிவுறகளை வழங்கப்பட்டுள்ளது.

கடிதத்தில்,

  • பல மாநிலங்களில் கொரோனா தொற்று நோயாளிகளிடம், குறிப்பாக ஸ்டீராய்டு சிகிச்சை பெறுவோர் மற்றும் சீரற்ற சர்க்கரை கட்டுப்பாடு கொண்டவர்களிடையே இது காணப்படுகிறது.
  • கருப்பு பூஞ்சை தொற்று கொரோனா தொற்று நோயாளிகளுக்கு நீண்ட கால பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
  • இந்த பூஞ்சை தொற்றுக்கான சிகிச்சைக்கு பன்முக அணுகுமுறைகள் தேவைப்படுகிறது.
  • கண் டாக்டர்கள், இ.என்.டி. நிபுணர்கள், பொது மருத்துவர், நரம்பியல் மருத்துவர் மற்றும் பல்-முக அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்பட பல்துறை வல்லுனர்களும் இந்த நோய்க்கான சிகிச்சைக்கு தேவைப்படுகின்றனர்.
  • ஆம்போடெரிசின்-பி ஊசியும் பூஞ்சை தடுப்பு மருந்தாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது

தொற்று நோய் சட்டம் 1897-ன் கீழ் இந்த நோயை ஒரு அறிவிக்கத்தக்க நோயாக வகைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக தெலங்கானா மாநில அரசு அறிவித்தது உள்ளது.

மேலும் மத்திய அரசு கருப்பு புஞ்சை தொடர்பான பரிசோதனை, சிகிச்சை மற்றும் நிர்வாகத்துக்காக மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வுக்கவுன்சில் போன்றவை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை தொற்று தொடர்பான சந்தேக நோயாளிகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் குறித்து மாவட்ட அளவிலான தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் சுகாதாரத்துறைக்கு மேற்படி சுகாதார மையங்கள், மருத்துவமனைகள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.