இந்த ஆண்டு நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மீண்டும் ஒத்திவைப்பு!

Read Time:1 Minute, 20 Second

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2020-ஆம் திட்டமிடப்பட்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று நோயால் 2021-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக அடுத்த மாதம் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாவும், இந்த போட்டி தொடர் 2023-ல் நடைபெறும் என்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

எனினும், பாகிஸ்தானில் 2022-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்கள் எதுவும் நடைபெறவில்லை.

கடைசியாக நடைபெற்ற இரண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்களையும் இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.