சீனா செயற்கையாக உருவாக்கியதே கொரோனா வைரஸ்… வெளியான புதிய ஆதாரம்

Read Time:5 Minute, 1 Second

கொரோனா வைரசை சீன உகான் ஆய்வகத்தில் உருவாக்கியதற்கான புதிய ஆதாரம் அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் அம்பலமாகியிருக்கிறது.

உலகம் முழுவதும் வெறியாட்டம் போட்டு வரும் கொரோனா வைரஸ் இன்னும் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை. இந்தியாவில் கொரோனா 2-வது அலையில் மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றனர். வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த தேசமும் திண்டாடி வருகிறது.

இப்படி உலக மக்களை பேரிடரில் தள்ளி, உலக பொருளாதாரத்தை சீரழித்து வரும் இந்த கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியது.

சீனாவின் உகான் நகரில் உள்ள சந்தை ஒன்றில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவியதாக அந்நாட்டு அரசு கூறிவருகிறது. ஆனால், அங்கிருக்கும் வைரஸ் ஆய்வகத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியதாகவும், சீனா தான் வேண்டுமென்றே இந்த வைரசை பரப்பியதாகவும் உலகளாவிய அளவில் பல்வேறு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இவ்விவகாரத்தில் சீனாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் கடும் மோதல் போக்கு நிலவுகிறது.

அமெரிக்காவின் அதிபர் ஜனாதிபதி டிரம்ப் இது தொடர்பாக சீனா தான் வைரசை பரப்பியது என உறுதியாக குற்றம் சாட்டினார். வைரசை சீன வைரஸ் என்றும் அழைத்து வந்தார்.

இதற்கிடையே கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனத்தை உலக நாடுகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி சர்வதேச நிபுணர் குழு ஒன்றை அமைத்த உலக சுகாதார நிறுவனம் அமைத்தது. முதல் இந்த குழுவை சீனாவுக்குள் அனுமதிக்க மறுத்த அந்நாட்டு அரசு பின்னர் ஒப்புக்கொண்டது. இக்குழுவும் உகானில் ஆய்வு நடத்தியது.

ஆய்வை மேற்கொண்ட நிபுணர் குழுவினர் கடந்த மார்ச் மாதம் தங்கள் அறிக்கையை உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்தனர்.

இது குறித்து உலக சுகாதார நிறுவன இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ், இந்த அறிக்கை மிக முக்கியமான தொடக்கமேயன்றி, முடிவு கிடையாது. வைரசின் தோற்றத்தை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றார்.

மேலும் வைரஸ் உருவானது தொடர்பான ஆய்வுகளை நாங்கள் தொடர வேண்டும் என்றும் கூறினார். வைரஸ் தோற்றம் தொடர்பான அனைத்து காரணிகளும் (ஆய்வகத்தில் தோற்றுவிக்கப்பட்டது உள்ளிட்ட) விசாரிக்கப்படும் என்றும் தெளிவாக குறிப்பிட்டார்.

சீனா ஆராய்ச்சியாளர்களுக்கு கொரோனா

இந்த நிலையில் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கான புதிய ஆதாரம் ஒன்றை அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிகை இதுதொடர்பான தகவலை வெளியிட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் குறித்த தகவல்களை சீனா வெளியிடுவதற்கு முன்னரே, அதாவது 2019-ம் ஆண்டு நவம்பர் மாத்திலேயே இந்த ஆய்வகத்தில் பணியாற்றி வரும் பல ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிற பருவகால நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட 3 ஆய்வாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சையை நாடியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அமெரிக்க உளவுத்துறை அறிக்கையின்படி வால் ஸ்ட்ரீட் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த தகவல் வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்து தான் பரவியிருக்கலாம் என்ற சர்வதேச சமூகத்தின் சந்தேகம் மேலும் வலுப்பெற்று இருக்கிறது… இந்த தகவல் உலக நாடுகளை மேலும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. சீனா, விலங்குகளிடம் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது எனக் கூறும் நிலையில், ஆய்வகத்தில் தான் முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பதும் தெரியவந்திருக்கிறது.