இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று தொடங்குகிறது..

Read Time:3 Minute, 5 Second

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான ஐசிசி டெஸ்ட் உலகக் கோப்பை இறுதி போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தூக்கிய முதல் அணியாக வரலாற்று சாதனை படைக்கும்.

ரோஸ் பவுல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா அணி, இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவிருந்தாலும், அந்த மைதானத்தில் ஒரு போட்டியில் கூட விளையாடாத நியூசிலாந்துக்கு எதிராக இந்த மைதானத்தில் அனுபவம் பெற்ற அணியாக நல்ல நிலையில் இந்தியா இருக்கும்.

நடுநிலையான இடத்தில் இரு அணிகளும் ஒருவரையொருவர் எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும். ஒட்டுமொத்தமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா உயர்ந்த சாதனையைப் பெற்றிருக்கிறது. இதுவரை இரு அணிகளும் 59 டெஸ்ட் விளையாடியுள்ளன, இதில் இந்தியா 21 வெற்றி மற்றும் 12 தோல்விகளை சந்தித்துள்ளது. ஆனால் இந்தியாவின் 16 வெற்றிகள் உள்நாட்டில் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்துள்ளன.

நியூசிலாந்தில், இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா அணி ஐந்தில் மட்டுமே வென்றுள்ளது, 10 போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ளது.

வீரர்கள் விபரம்

இந்தியா: ரோஹித் சர்மா, சுப்மன் கில், செசெதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (சி), அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (சி), டாம் ப்ளெண்டெல், டிரென்ட் போல்ட், டெவோன் கான்வே, கொலின் டி கிராண்ட்ஹோம், மாட் ஹென்றி, கைல் ஜேம்சன், டாம் லாதம், ஹென்றி நிக்கோலஸ், அஜாஸ் படேல், டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர் பிஜே வாட்லிங் மற்றும் வில் யங்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்தியா நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டாரில் நேரலையில் ஒளிபரப்பப்படும். மேலும் டிடி ஸ்போர்ட்ஸில் ஒரு சிறப்பு ஏற்பாட்டின் கீழ் நேரலையில் ஒளிபரப்பப்படும்.