உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவராக இந்தியா பிரதமர் நரேந்திர மோடி தேர்வு..!

Read Time:2 Minute, 50 Second

இந்தியாவில் கொரோனா தொற்று விவகாரத்தில் பிரதமர் மோடியை எதிர்க்கட்சி தலைவர்கள் என்ன தான் கடுமையாக விமர்சனங்களை செய்து வந்தாலும், இன்னும் உலக மக்களிடம் பிரதமர் மோடி செல்வாக்குமிக்க தலைவராக உள்ளார்.

அதற்கு சமீபத்திய ஆதாரம் தான் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ உலகத்தலைவர்களின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது பற்றி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி தர வரிசைப்பட்டியலை வெளியிட்டு உள்ளது.

இதன்படி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி,கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ ஆகிய 13 நாடுகளின் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் உலகளாவிய பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் பிரதமர் மோடி. இவர் 66 சதவீத ஆதரவை பெற்றிருக்கிறார்.

இதே மார்னிங் கன்சல்ட் நிறுவனம் கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்திய கருத்து கணிப்பு முடிவில், பிரதமர் நரேந்திர மோடிக்கு 82 சதவீதம் பேர் ஆதரவும், 11 சதவீதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். தற்போதைய அசாதாரண சூழ்நிலையால் உலக தலைவர்களின் செல்வாக்கு சரிந்துள்ளது. இந்த வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கும் சரிந்திருந்தாலும் உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் அவர் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

முதல் 10 இடங்களை பெற்றிருக்கிற தலைவர்களும், அவர்களின் செல்வாக்கு சதவீதமும்:-

  1. இந்திய பிரதமர் மோடி – 66 சதவீதம்
  2. இத்தாலி பிரதமர் மரியோ டிராகி – 65 சதவீதம்
  3. மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மேனுவல் லோபஸ் ஓபரடார் – 63 சதவீதம்
  4. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் – 54 சதவீதம்
  5. ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலா – 53 சதவீதம்
  6. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ – 48 சதவீதம்
  7. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் – 44 சதவீதம்
  8. தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் – 37 சதவீதம்
  9. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ் – 36 சதவீதம்
  10. பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ – 35 சதவீதம்.