திருநீறு அணிவதை கேலி செய்த இளைஞருக்கு கிருபானந்த வாரியார் கொடுத்த பதில்….

Read Time:3 Minute, 0 Second

திருநீறு அணிவதை கேலி செய்தவருக்கு கிருபானந்த வாரியார் கொடுத்த பதில்….

முருகனின் பெருமைகளை தன்னுடைய சொற்பொழிவுகளின் மூலமாக அற்புதமாக வெளிப்படுத்தியவர், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

அன்பு, ஆன்மீகம், அறிவியல் என அனைத்தையும் தன்னுடைய இன்முகத்துடன், சலிக்காது உலகிற்கு எடுத்துரைத்தவர். மேடைகளில் அவர் ஒவ்வொரு விஷயத்திற்கும் கொடுக்கும் விளக்கம், அனைவரையும் வியக்க வைக்கவும் செய்யும், சிந்திக்கவும் வைக்கச் செய்யும். மேட்டையில் அவர் பேசும்போதே பக்தர்களை நோக்கி கேள்வியையும் எழுப்புவார், அவர்களுடைய கேள்விக்கு பதிலும் அளிப்பார். தன்னுடைய பேச்சில் கலங்கிய குட்டையாக நிற்கும் மனதை தெளிந்த நீரோடும் ஆறாக்கிவிடுவார்.

அதே நேரம வாரியாரிடம் எடக்கு மடக்காக எழுப்பும் கேள்விகளுக்கு, அதே பாணியில் பதிலடியை இன்முகத்துடனே கொடுப்பார். அப்படி திருநீறு அணிவதை கேலி செய்த இளைஞருக்கு அவர் கொடுத்த பதிலடியை பார்க்கலாம்.

பெரும்பாலும் ரெயில் பயணங்களை விரும்பும், கிருபானந்த வாரியார் ஒருமுறை சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக ஓரிடத்திற்கு ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். இரவுநேரப் பயணத்தில் தூங்கிய அவர், காலையில் எழுந்த கிருபானந்த வாரியார், முகம், கை, கால்களை கழுவிக்கொண்டு, கை நிறைய திருநீற்றை எடுத்து, தன்னுடைய நெற்றியில் பட்டையாக பூசிக்கொண்டார்.

அவருக்கு எதிரில் அமர்ந்திருந்த ஒரு இளைஞரோ, கிருபானந்த வாாியாரை வம்பிழுக்கும் விதமாக “என்ன பெரியவரே.. ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கிறீர்கள்?” என்று கேள்வி கேட்டுள்ளார்.

தன்னிடம் கேள்விகள் எப்படி வருகிறதோ, அப்படியே பதிலை கொடுக்கும் வாரியார் சுவாமிகள், இளைஞருக்கு நக்கலாக பதிலை கொடுத்தார். தம்பி.. குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளை அடிப்பார்கள். என் நெற்றியில் இறையன்பும், நல்லுணர்வுகளும் குடி கொண்டிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலியாக இருக்கும் வீட்டிற்கு யாரும் வெள்ளையடிக்க மாட்டார்கள் என்று அர்த்தம் ஆயிரம் பொதிந்திய பதிலை கொடுத்துவிட்டு புன்னகைத்து சென்றுவிட்டார்.