இந்தியாவில் கொரோனா வைரஸ் தனது கொடிய கோர முகத்தை காட்ட துவங்கி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகமாகி செல்கிறது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பொதுமக்களிடம் நிதி திரட்டி வருகிறார்கள். பொதுமக்களும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். […]

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரசினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் 66 ஆயிரத்து 431 பேர் வீட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மேலும் 253 பேர் அரசு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கூடுதலாக கொரோனா வைரஸ் கண்டறியும் 2 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. […]

அதிகம் வாசிக்கப்பட்டவை