அசாமில் பற்றி எரியும் ஆறு…! ‘சுற்றுச்சூழல் பேரழிவு’ என விமர்சனம்

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டம் நகார்கட்டியாவில் புர்ஹி திஹிங் என்ற சிறிய ஆறு ஓடுகிறது.

கவுகாத்தியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் ஓடுகிறது இந்த ஆறு. ஆற்றையொட்டி ஆயில் இந்தியா நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. 3 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் எண்ணெய் குழாயில் வெடிப்பு உண்டாகி அதில் தீப்பற்றியுள்ளது. இந்த தீ ஆற்றை சுற்றிலும் பரவியது. தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் அடர்ந்த கரும்புகை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆயில் இந்தியா நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். பொதுமக்கள் யாரேனும் சிலர் குழாயை உடைத்து, அதனால் எண்ணெய் ஆற்றுக்குள் பரவியிருக்க கூடும் என அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இந்த தீவிபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இதுதொடர்பாக ஆயில் இந்தியா நிறுவனத்தின் மூத்த மேலாளர் திரிதிவ் ஹசாரிகா கூறுகையில், “கடந்த ஜனவரி 31-ம்தேதி இரவு விபத்து ஏற்பட்டது. பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் ஆற்றில் தீப்பற்றி எரிந்து வருகிறது. அதை அணைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.

பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து கச்சா எண்ணெயை எடுத்து, சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளதாக ஆயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இச்சம்பவத்தின் அடிப்படை காரணங்களை கண்டறிந்து தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, வழக்கமான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. அனைத்து கசிவுகளும் சரி செய்யப்பட்டு, நிறுவல்களில் இருந்து கச்சா எண்ணெய் பெறப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே டுவிட்டர்வாசிகள் இடன்னை ‘சுற்றுச்சூழல் பேரழிவு’ என விமர்சனம் செய்து வருகின்றனர். மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்கள் இதனை புறக்கணிப்பதாக விமர்சனம் செய்துள்ளனர்.

Next Post

மலேசிய பாமாயிலுக்கான இந்திய மறுப்பு.... சரிசெய்வோம் என களமிறங்கும் பாகிஸ்தான்...!

Tue Feb 4 , 2020
அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டம் நகார்கட்டியாவில் புர்ஹி திஹிங் என்ற சிறிய ஆறு ஓடுகிறது. கவுகாத்தியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் ஓடுகிறது இந்த ஆறு. ஆற்றையொட்டி ஆயில் இந்தியா நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. 3 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் எண்ணெய் குழாயில் வெடிப்பு உண்டாகி அதில் தீப்பற்றியுள்ளது. இந்த தீ ஆற்றை சுற்றிலும் பரவியது. தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. […]

Breaking News

அதிகம் வாசிக்கப்பட்டவை