கோவையில் கல்லூரி மாணவி உயிரிழப்புக்கு காரணமான பயிற்சியாளர் எங்களால் அனுமதிக்கப்பட்டவர் கிடையாது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கோவை மாட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் தனியார் கல்லூரியில் செவ்வாய் கிழமை பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது பூகம்பம் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது, கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது […]

சாயப்பட்டறைகள் மற்றும் சலவை ஆலை கழிவுகள் நொய்யலில் கலப்பதால் ஆற்றில் நீர் வரும்போதெல்லாம் நுரை பொங்கி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. கோவையில் நொய்யல் ஆற்றில் புதன்கிழமை புதுவெள்ளம் நுரை பொங்கி காணப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைக் காடுகளின் நீர் பிடிப்பு பகுதிகளை முக்கிய நீர் ஆதாரமாக கொண்டுள்ள நொய்யல் ஆற்றில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து அதிகரித்தது. […]

ஐடி ரெய்டில், தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனம் வரிஏய்ப்பு செய்தது, பண மதிப்பு நீக்கத்தின் போது கருப்பு பணத்தை மாற்ற வியூகம் செய்தது, அரசியல் கட்சிகளுக்கு லஞ்சம் வழங்கியது தெரியவந்துள்ளது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு போன்ற பொருட்களை ‘கிறிஸ்டி ஃபிரைடுகிராம் இண்டஸ்ட்ரி’ என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஆண்டிபாளையத்தில் இதன் அலுவலகம் உள்ளது. […]

துணை நிலை ஆளுநர் அதிகாரம் விவகாரத்தில் டெல்லிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது. யூனியன் பிரதேசமான டெல்லியில் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கா? இல்லை மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட துணை நிலை ஆளுநருக்கா? என்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், டெல்லி அரசின் ஆலோசனையுடன் தான் துணை நிலை ஆளுநர் செயல்பட முடியும் என்று தீர்ப்பு வழங்கியது. டெல்லியில் அதிகாரம் தொடர்பாக மோதல் நேரிட்டது போன்று […]

டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், மத்திய அரசால் நியமனம் செய்யப்படும் துணை நிலை ஆளுநரிடம்தான் அதிகாரம் குவிந்திருந்தது. இதனால் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் நேரிட்டது. “அமைச்சரவையின் முடிவுகளை டெல்லி துணை ஆளுநர் செயல்படுத்த விடுவது கிடையாது, ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறார்,” என்று ஆம் ஆத்மி […]

ஜூலை முதல் வாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெற உள்ளநிலையில், கர்நாடகம் மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கியது. கர்நாடகத்துக்கு ஏற்கனவே இருந்த அளவில் 14 டிஎம்சி உயர்த்தி 284.75 டிஎம்சி நீரும், தமிழகத்துக்கு 419 டிஎம்சி என்ற அளவில் இருந்து 404.2 டிஎம்சியாகவும் குறைக்கப்பட்டது. கேரளாவுக்கு 30 டிஎம்சி, […]

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 30 பொருட்களுக்கு இந்தியா அதிரடியாக கூடுதல் வரிவிதிப்பை விதித்துள்ளது. அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின்னர் அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறார். டிரம்ப் நிர்வாகம், கனடா, மெக்சிகோ நாடுகளில் தவிர மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கான வரி விகிதத்தை கடுமையாக உயர்த்தி வருகிறது. வர்த்தகம் தொடர்பான அவருடைய நகர்வில் முதலில் சிக்கியது சீனா. வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் […]

உலகளாவிய கார்ப்பரேட் செயல்பாட்டில் ‘நிதி முதலாளித்துவம்’ உலகம் முழுவதும் தேசிய அரசுகளையும், அரசியல்களையும் தன்னுடன் இணைக்கும் வகையில் கொள்கையினை உருவாக்கிக்கொள்கிறது. விவசாயிகள், நடுத்தர தொழில்களுக்கு ஆதரவாக அரசுக்கள் செயல்பட்ட காலங்களே பொற்காலமாக இருந்தது. ஆனால் இன்றைய ஜனநாயகத்தில் இவையனைத்தும் மாறியுள்ளது. ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டும் அரசுக்கள் நிதி முதலாளித்துவ செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது கிடையாது, மாறாக வளர்ச்சியென்ற பெயரில் கண்களை மூடிக்கொண்டு முதலாளித்துவ கொள்கையுடன் நகர்கிறது. ஜனநாயக அரசுக்கள் […]

1

வரலாற்றில் இல்லாத வகையில் இந்தியா தண்ணீர் பிரச்சினையை எதிர்க்கொள்கிறது, இந்நிலையானது வரும் காலங்களில் மிகவும் மோசமடையும் என நிதி ஆயோக் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்தியா முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் தண்ணீர் பயன்பாடு தொடர்பாக நிதி ஆயோக் விரிவான ஆய்வு நடத்தி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், 60 கோடி இந்தியர்கள் இப்போது கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்க்கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் பாதுகாப்பான நீர் கிடைக்கப் பெறாததால் ஒவ்வொரு […]

Breaking News

அதிகம் வாசிக்கப்பட்டவை

Follow us on Facebook

Like Us!
X myStickymenu