இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணி அடிப்படையில் (எஸ்.எஸ்.சி. கமிஷன்) தேர்வு செய்யப்பட்டு பெண் அதிகாரிகளாக இருப்பவர்கள், 10 ஆண்டுகள் அந்த பதவியில் இருக்க முடியும். மேலும் 4 ஆண்டுகள் அவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்க விதிமுறை உள்ளது. இந்தநிலையில் ராணுவத்தில் பெண்களுக்கு உயர் பதவிகள் அளிக்கப்படுவது இல்லை என்றும், ஆண் அதிகாரிகளை போல் பெண் அதிகாரிகளுக்கும் உயர் பதவி வழங்க வேண்டும் என்றும் 1993-ம் ஆண்டு முதல் ராணுவத்தில் […]

டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றியை ப.சிதம்பரம் புகழ்ந்ததை பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். கெஜ்ரிவால் வெற்றி விவகாரத்தில் டெல்லி காங்கிரஸ் விமர்சனங்களை முன்வைக்கிறது. ஆனால், பிற மாநில காங்கிரஸ் தலைவர்கள் கெஜ்ரிவாலை பாராட்டுகிறார்கள். இந்நிலையில் மேலும் ஒரு மோதல் காங்கிரசில் வெடித்து உள்ளது. மும்பை காங்கிரஸின் முன்னாள் தலைவர் மிலிந்த் தியோரா அரவிந்த் கெஜ்ரிவாலை பாராட்டி டுவிட்டரில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டார். அதில், […]

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என சென்னை உள்பட சில இடங்களில் போராட்டம் நீடிக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 16-ம் தேதி வாரணாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார். பிரதமர் மோடி பேசுகையில், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய முடிவுகளை எனது அரசு எடுத்து வருகிறது. இனிமேலும் எடுக்கும். காஷ்மீருக்கு சிறப்பு […]

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் நீக்கியது. இவ்விவகாரத்தில் பிறநாடுகள் கருத்து தெரிவிக்க இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரம் குறித்து பேசும் நாடுகளுக்கு இந்தியா தக்க பதிலடியையும் கொடுத்து கண்டனம் தெரிவித்து வருகிறது. தற்போது அமெரிக்க செனட் உறுப்பினருக்கு இந்தியா சரியான பதிலடியை நேரடியாக கொடுத்து உள்ளது. ஜெர்மனியின் முனீச் நகரில் நடந்த பாதுகாப்பு கூட்டத்தில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் […]

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா முகத்தை மறைத்து பர்தா அணிவது ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் விவாதப்பொருளாகி உள்ளது. 2019 பிப்ரவரியில் மும்பையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதிஜா முகத்தை மறைத்து பர்தா அணிந்து பேசினார். இதை பார்த்த சிலர் ஏ.ஆர்.ரகுமான் இரட்டை வேடம் போடுவதாகவும் மகளை கட்டாயப்படுத்தி பர்தா அணிய வைத்துள்ளதாகவும் வலைத்தளத்தில் விமர்சனம் செய்தனர். இதை தொடர்ந்து முகத்தை மறைக்காமல் தலையில் முக்காடு மட்டும் போட்டுள்ள […]

ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் போன்றவற்றை வழங்குவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க ஜெகன் மோகனின் அரசு அதிரடியாக முடிவு செய்து உள்ளது. ஆந்திர அமைச்சரவை கூட்டம் அமராவதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது தொடர்பாக அம்மாநில தகவல் தொடர்புத் துறை அமைச்சர் நானி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலை […]

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்படும் வெடிகுண்டுகள் மற்றும் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய பகுதிக்குள் விழும் குண்டுகளை இந்திய ராணுவம் செயல் இழக்க செய்கிறது. இப்படி செயல் இழக்கச் செய்யும்போது வீரர்கள் காயம் அடைவது, உயிரிழப்பது போன்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் நடக்கிறது. பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட பாலகோட்டில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை அழித்தது. அப்போது, இருதரப்பு விமானப்படைகள் இடையே மோதல் வெடித்தது. இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் […]

கடந்த மாதம் ஈராக்கில் அமெரிக்கப்படையினர் தங்கியிருந்த விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஈரானை தனிமைப்படுத்தி, அதன் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. ஈரானின் அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நிலைக்கொண்டு உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிக்கும் பணிக்காக ஈராக் வந்து அமெரிக்க ராணுவம் பிஸ்மாயக், தாஜி, […]

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜனதா 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி, ஒரு இடத்தைக்கூட பிடிக்கவில்லை. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டசபை கட்சி தலைவராக (முதல்வராக) அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன் அடிப்படையில், அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அரவிந்த் கெஜ்ரிவால், […]

Breaking News

அதிகம் வாசிக்கப்பட்டவை