பாஜக தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி, “இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி தேவியின் உருவத்தை பொறிக்க விரும்புவதாகவும் இதனால் நாணயத்தின் நிலையை மேம்படும்” என்று தெரிவித்துள்ளார். ஜனவரி 14 இரவு, மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் ‘சுவாமி விவேகானந்த வ்யக்யன்மாலா’ என்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றிய சுவாமி செய்தியாளர்களிடம் பேசினார். இந்தோனேசிய நாணயத்தில் அச்சிடப்பட்ட விநாயகர் படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சுவாமி, “பிரதமர் நரேந்திர மோடி இந்த […]

தோல்விகளால் துவண்ட காங்கிரஸ் கட்சிக்கு உயிர்க்கொடுக்க ஜனவரியில் பிரியங்கா காந்தி அரசியலுக்கு வந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைபோன்று இருப்பதால் பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை காங்கிரசார் மத்தியில் தொடர்ந்து இருந்தது. கடைசியில் காங்கிரஸ் கட்சியும் அவரை உத்தரபிரதேச மாநில கிழக்கு பிராந்திய பொதுச்செயலாளராக ஜனவரி 23-ம் தேதி அறிவித்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருந்த நிலையில் பிரியங்கா உ.பி.யில் தீவிரமாக பணியாற்றினார். அவருடைய பிரசாரத்திற்கு கூட்டம் கூடியது. […]

மராட்டிய மாநில முதல்வர் பதவிக்கு அடிபோடும் சிவசேனா பிரம்மாஸ்திரமாக ஆதித்ய தாக்கரேவை களமிறக்கியுள்ளது. மகாராட்டியத்தில் 1966-ம் ஆண்டு சிவசேனா பால் தாக்கரேவால் தொடங்கப்பட்டது. ஆரம்பக்கட்டத்தில் மராட்டியம் மராட்டியர்களுக்கேயென பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக இனவெறியை வெளிப்படுத்தி ஆரம்பக்கட்டத்தில் அரசியல் செய்தது. பா.ஜனதாவுடன் எப்போதும் தோள் கொடுத்து நிற்கும் கட்சியாக இருக்கிறது. மாநிலத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் அளவிற்கு வளர்ந்தாலும் ஆட்சி அரியணையில் ஏறமுடியவில்லை. ஆரம்பக்கட்ட கொள்கையிலிருந்து விலகி இந்துத்துவா கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் […]

கன்னடமொழியின் முக்கியத்துவத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என எடியூரப்பா கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த நாடு முழுவதற்கும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, தமிழகம், கர்நாடகம், கேரளா, மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலுங்கானாவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அவரது கருத்து நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் என்று கூறி தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் […]

புதுடெல்லியில் அரசு பங்களாக்களை காலி செய்ய உத்தரவிட்டும் முன்னாள் எம்.பி.க்கள் 82 பேர் காலி செய்யாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த மே மாதம் 25-ம் தேதி 16-வது மக்களவையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலைத்து உத்தரவிட்டார். மக்களவை கலைக்கப்பட்டு ஒரு மாதத்தில் எம்.பி.க்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்பது விதியாகும். ஆனால் எம்.பி.க்கள் அப்படி செய்வது கிடையாது. கடந்த மாதம் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட […]

தெலுங்கானா, ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டார். நரசிம்மன், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஆந்திரம், தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஆளுநராக இருந்து வருகிறார். தற்போது அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை […]

டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சியின் புதிய இடைக்கால தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் ராகுல் காந்தி தலைவரானார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவதற்காக தீவிரமாக செயல்பட்டு வந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எதிர்க்கட்சி தலைவர் பதவிகூட கிடைக்கவில்லை. தேர்தலில் வெறும் 52 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் […]

முதல்வர் பழனிசாமியின் பேச்சைக் கேட்டு அசந்திருக்கிறேன் என்றுஎதிர்க்கட்சி துணைத் தலைவர்துரைமுருகன் பாராட்டு தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய துரைமுருகன், “கேள்வி – பதில் நேரத்தை குறைத்துக் கொள்ளலாம் என நாங்கள் கேட்டபோது, பேரவை உறுப்பினர்கள் அரசிடம்இருந்து பதில்களைப் பெற கேள்வி நேரம் உதவியாக உள்ளது என முதல்வரும், பேரவைத் தலைவரும் தெரிவித்தனர். இதனை நாங்களும் ஏற்கிறோம். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்தபோது காவல் […]

2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராணுவம் மற்றும் ராணுவ நடவடிக்கையை பிரசாரத்தில் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டாலும் அது தொடர்கிறது. பா.ஜனதாவின் கூட்டத்தில் தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவம் மற்றும் ராணுவ நடவடிக்கை பற்றியே பெரிதும் பேசப்படுகிறது. காங்கிரஸ் தேசிய பாதுகாப்பை தியாகம் செய்தது என்றும் குற்றம் சாட்டுகிறது. இந்தியப் படைகள் அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் அதை காங்கிரஸ் கேலி செய்கிறது எனவும் பா.ஜனதா பிரசாரம் செய்து வருகிறது. […]

Breaking News

அதிகம் வாசிக்கப்பட்டவை