7-வது தேசிய நடைப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் 23 வயதான ராஜஸ்தான் வீராங்கனை பாவனா ஜாட் 1 மணி 29 நிமிடம் 54 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்து தங்கம் வென்றார். மேலும், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற 1 […]

16 அணிகள் பங்கேற்ற 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வந்தது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதியது. இறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி, நடப்பு சாம்பியன் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக கோப்பையை வசப்படுத்தி சாதனை படைத்தது. வங்காளதேச அணி உலக அளவிலான போட்டிகளில் வென்ற முதல் மகுடம் இது தான். […]

ஆஸ்திரேலியாவில் காட்டு தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலநிதி திரட்ட 10 ஓவர் கண்காட்சி கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நாளை நடக்கிறது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும், ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும் மோதுகின்றன. ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் பயிற்சியாளராக இருக்கிறார். இதற்காக ஆஸ்திரேலிய சென்றுள்ள தெண்டுல்கரிடம் நீங்கள் விளையாடிய போது உச்ச நிலையில் இருந்த காலகட்டத்தில் ஆடியதை போல் […]

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செஸ்ட்ரூமில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 43.1 ஓவர்களில் 172 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் 173 ரன்கள் […]

சுவீடன் நாட்டில் உள்ள போரஸ் நகரில் தங்க மங்கை சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் 75 நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இந்த தொடரில் இந்திய ஜூனியர் மகளிர் அணியினர் 5 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கம் வென்றது. இளையோர் அணி ஒரு தங்கம், 4 வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. ஜூனியருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற அரியானாவின் பிராச்சி தங்கர், தொடரின் சிறந்த வீராங்கனை […]

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 15-ம் நிலை வீராங்கனை சோபியா கெனின் (அமெரிக்கா), முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் கார்பின் முகுருஜாவுடன் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்தினார். ஆக்ரோஷமாக ஆடிய இவர்கள் முதல் செட்டில் 4-4 என்று சமநிலைக்கு வந்தனர். அதன் […]

18 வயதுக்கு குறைவான உலக இளையோர் செஸ் சாம்பியன் போட்டியில் சென்னையை சேர்ந்த சிறுவன் பிரக்னாநந்தா தங்கம் வென்று சாதனை படைத்தார். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கான உலக இளையோர் செஸ் சாம்பியன் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரும் தமிழகத்தை சேர்ந்த சிறுவன் ஆர். பிரக்னாநந்தா பங்கேற்றார். பிரக்னாநந்தா நேற்று நடந்த போட்டியில் 11-வது மற்றும் இறுதி சுற்று போட்டியில் ஜெர்மனி வீரர் வேலன்டைன் பக்லஸை வீழ்த்தினார். […]

கொல்கத்தாவில் ஒரு சிறுமியும் சிறுவனும் பள்ளிச் சீருடையில் சாலையில் அனாசயமாக குட்டிக்கரணம் அடிக்கும் அந்த குறிப்பிட்ட வீடியோ மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ஒலிம்பிக் ஜிம்னாஸ்ட் வீராங்கனை நாடியா கோமனேசி ஆகியோரின் பாராட்டைப் பெற்றுள்ளது. அந்த வீடியோ வைரலான நிலையில், நாடியா கொமேனேசி தனது ட்விட்டர் பக்கத்தில், வீடியோவைப் பகிர்ந்து “இது அற்புதமானது” எனப் பதிவிட்டார். அதனை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “நாடியா கோமனேசி […]

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனையான மிதாலி ராஜ் டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தை பூர்விகமாக கொண்ட 36 வயதான மிதாலி ராஜ் இந்திய மகளிர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக இருந்து வந்தார். டி20 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இவர் தற்போது டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் 89 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2364 ரன்களை […]

Breaking News

அதிகம் வாசிக்கப்பட்டவை