ஜாதிக்காய் என்பது பல மருத்துவ குணங்களை உடைய மசாலாபொருளாகும், இதில் இரும்பு, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற முக்கிய தாதுக்கள் உள்ளன. இதன் பூர்வீகம் இந்தோனேசியாவில் உள்ள ‘மிரிஸ்டிகா ஃபிராக்ரான்ஸ்’ எனும் மரத்தில் இருந்து பெறப்படுகிறது, தற்போது மலேசியா, கரீபியன் மற்றும் தென்னிந்தியாவிலும் வளர்க்கப்படுகிறது.
ஜாதிக்காயின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள்:
1. தூக்கமின்மைக்கு உதவுகிறது: ஜாதிக்காய் தூங்க சிறந்த உதவியாக செயல்படுகிறது. அதிலுள்ள தன்மைகள் உடலை அமைதியாக்கி தூக்கத்தை ஊக்குவிக்கின்றன. இரவில் தூங்குமுன் வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீரில் சிறிது ஜாதிக்காய் பொடியைச் சேர்த்து உட்கொள்ளலாம், இது நல்ல மற்றும் ஆரோக்கியமான தூக்கத்தை அளிக்கும்.
2. மூட்டு வலிக்கு நிவாரணம்: ஜாதிக்காயில் மிரிஸ்டிசின், எலிமிசின், யூஜெனால் மற்றும் சஃப்ரோல் போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன, இவை மூட்டு வலிகளை குறைக்க உதவுகின்றன. இதனால் உடல் வலி மற்றும் வீக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை பயன்படுத்தலாம்.
3. செரிமானத்திற்கு உதவுகிறது: ஜாதிக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் அதன் சிறப்பான சுவை குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன. செரிமான நொதிகளின் சுரப்புக்கு உதவி செய்ததால், அதிக வாயுவை அகற்றவும் இது உதவுகிறது.
4. பல் வலிக்கு நிவாரணம்: ஜாதிக்காய் எண்ணெயில் உள்ள யூஜெனால் பல் வலிக்கு நிவாரணமாக செயல்படுகிறது. பல் வலிக்கான இயற்கையான தீர்வாக, இதனை சிறிதளவு பயன்படுத்தலாம்.
5. குமட்டல் மற்றும் அஜீரணத்துக்கு சிகிச்சை: குமட்டல் மற்றும் இரைப்பை அழற்சியை சரிசெய்ய ஜாதிக்காயை தேனுடன் கலந்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அஜீரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை பின்பற்றலாம்.
6. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது: ஜாதிக்காயின் இயற்கை சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன. ஆய்வுகள் இது கணைய செயல்பாட்டை மேம்படுத்தக்கூடும் என்று கூறுகின்றன.
7. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது: ஜாதிக்காய் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதால், சிறுநீரக தொற்றுகளை சரிசெய்யவும் உதவுகிறது.
8. நோயெதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது: இயற்கையான தாதுக்கள் நிறைந்த ஜாதிக்காய், நோயெதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. தினசரி உணவில் இதனைச் சேர்த்துக்கொள்வது நலம் தரும்.
9. முகப்பருக்களை அகற்ற உதவும்: ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள் முகப்பருக்களை குறைக்க உதவுகின்றன. சிறிதளவு ஜாதிக்காயை அரைத்து தேனுடன் கலந்த பேஸ்டை முகத்தில் தடவி வந்தால், சருமத்தில் பொலிவு ஏற்படும்.
இதனால், ஜாதிக்காயை தினசரி வாழ்வில் சீராகப் பயன்படுத்துவதன் மூலம் பலவித ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும்