ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி மூன்றாவது நாள் தொடக்கத்திலே 3 பதக்கங்களை வென்று 12 பதக்கங்களுடன் 7வது இடத்தில் இருக்கிறது. இதில் குறிப்பாக 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்ற பந்தயத்தில் இந்தியா முதல் தங்கம் வாங்கி இருக்கிறது. டிரஸ்சேஜ் எனப்படும் குதிரையை பயிற்று சாகசம் செய்யும் போட்டியில் தங்கம் கிடைத்தது.
இதில் திவ்யா கிரீத், சுதீப்தி, ஹிருதே, அனுஷ் ஆகியோர் குழுக்களாக 200 புள்ளிகளுக்கு மேல் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டி சென்றனர். Rowing எனப்படும் துடுப்பு படகு போட்டி மகளிர் பிரிவில் 27 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் 17 வயது வீராங்கனையான நேஹா தாக்கூர் வெள்ளி பதக்கம் வென்றார். இந்த போட்டியில் தாய்லாந்து வீராங்கனை தங்கமும், சிங்கப்பூர் வீராங்கனை வெண்கல பதக்கமும் வென்றார்கள்.
இதேபோன்று ஆடவருக்கான Wind surfer எனப்படும் பாய்மரப்படகு போட்டியில் இந்திய வீரர் ஏபாட் அலி வெண்கல பதக்கம் வென்றார். இதேபோன்று மகளிருக்கான குழு சைக்கிள் பந்தயக் போட்டியில் இந்திய அணி தென்கொரியாவிடம் தோல்வியை தழுவியது. இதேபோன்று ஆடவர் குழு சைக்கிள் பந்தயம் போட்டியில் இந்திய அணி ஜப்பான் இடம் ஒரு புள்ளி இரண்டு ஏழு வினாடிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
ஆடவருக்கான குத்துச்சண்டை போட்டியில் 57 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சச்சின் வெற்றி பெற்று ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இதேபோன்று துப்பாக்கி சுடும் ஸ்கீட் பிரிவில் முதல் சுற்றில் 209 புள்ளிகளுடன் முதல் சுற்றில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. நாளை இந்த தொடரின் இரண்டாவது சுற்று நடைபெற உள்ளது. இதேபோன்று தனி நபர்களுக்கான ஸ்கீட் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்திய வீரர் ஆனந்த் ஜித் சிங் முதல் சுற்று முடிவில் எட்டாவது இடத்தில் இருக்கிறார். இதன் இரண்டாவது சுற்று நாளை நடைபெறுகிறது. இதேபோன்று மகளிருக்கான ஸ்கீட் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்திய அணி நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. இதன் இரண்டாவது சுற்று நாளை நடைபெறும் நிலையில் இதில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் மூன்றாவது சுற்றில் தோல்வியை தழுவினார்.
இதேபோன்று மகளிர் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை ருத்ஜா போஸ்லே மூன்றாவது சுற்றில் தோல்வியை தழுவினார். இதேபோன்று ஸ்கூவாஷ் ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி மூன்றுக்கு 0 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது. இதேபோன்று 25 மீட்டர் பிஸ்டல் மகளிர் துப்பாக்கி சுடும் முதல் சுற்றில் இந்தியாவின் மானு பாக்கர் முதல் இடத்திலும் மற்றொரு வீராங்கனை ஆன ஈஷா சிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இதேபோன்று 400 மீட்டர் மெட்லி ரீலே நீச்சல் பந்தயத்தில் இந்திய அணி தேசிய அளவிலான சாதனையை முறியடித்து தற்போது இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதேபோன்று கத்திச்சண்டை போட்டியில் தமிழக வீராங்கனையான பவானி தேவி கால் இறுதியில் தோல்வியை தழுவி பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். இதேபோன்று பத்து மீட்டர் துப்பாக்கி சுடும் கலப்பு பிரிவில் இந்திய அணி கொரிய அணியிடம் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் தோல்வியை தழுவியது.